பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அரசு ஊழியர்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. கர்நாடகாவில் மாநில அரசு ஊழியர் சங்கம்(KSGEA) தங்களது கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியது. இதையடுத்து சில மணி நேரங்களில் அரசாங்கம் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது. அதாவது, கர்நாடகா ஊழியர்களுக்கு இடைக் கால நிவாரணம் வழங்கி, அடிப்படை ஊதியத்தை 17% உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்தது.

இது தவிர்த்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கைக்கு அரசு பணிந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே வழங்க வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு சார்பாக குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து ஊழியர் தலைவர்களிடம் பேசிய அம்மாநில அரசு, நிதித்துறை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியது.