அண்மையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 75 வயதுடைய ஒருவர் 70 வயதான காதலிக்கு தாலிக்கட்டுகிறார். இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள காதல் மலர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள முதியோர் காப்பகத்தில் Baburao Patil மற்றும் Anusuya Shinde இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

நாளடைவில் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்திய நிலையில், அது காதலாக மலர்ந்தது. அதன்பின் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர். இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்க திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள்  வைரலாகி வரும் நிலையில், பலரும் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.