நாம் சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பழைய 5 ரூபாய் நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்திருப்பதை நாம் கவனித்திருக்கக்கூடும். தற்போதுள்ள 5 ரூபாய் நாணயங்களானது பழைய 5 ரூபாய் நாணயங்களை விட எடை குறைவானதாக மற்றும் மெலிதானதாக இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி பழைய 5 ரூபாய் நாணயத்தை நிறுத்தியதற்கு காரணம் வங்க தேசத்திற்கு சட்டவிரோதமான கடத்தல் தான். இந்த நாணயங்களை கடத்தல்காரர்கள் வங்க தேசத்துக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.

அவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டதால் இந்தியாவில் நாணயத்தின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. பங்களாதேஷில் பழைய 5 ரூபாய் நாணயங்களை உருக்கி ரேஸர் பிளேடுகளின் வடிவத்தில் வைத்திருக்கின்றனர். அந்த பிளேடுகள் ஒவ்வொன்றும் ரூபாய்.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விஷயம் அரசாங்கத்துக்கு தெரியவந்ததை அடுத்து, உடனே அரசு நாணயத்தின் தோற்றத்தையும் உலோக உள்ளடக்கத்தையும் மாற்றியது.