பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு மக்களவை தேர்தலில் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து வாக்களித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு #Vote4INDIA ஹேஷ்டேக் போட்டிருக்கிறார்.

இதனால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க சொல்கிறாரா என பலரும் கேளியெழுப்பினர். இதற்கு அவர் விளக்கமளிக்கையில், “இந்திய நாட்டிற்காக வாக்களியுங்கள் என்றே கூறினேன், நான் பாஜகவில் தான் பயணிக்கிறேன்” என்றார்.