கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கால்நடைகளை அதிக அளவு வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியது. தொடர்ந்து தெருநாய்கள் அந்த பகுதியில் அட்டகாசம் செய்து வருவதால் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த விவசாயிகள் நேற்று பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பத்தாவது வார்டு கவுன்சிலர் தேவியுடன் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலருடம் பேச்சுவார்த்தை நடத்தி நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.