அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்று உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில் படிக்கும் 4- ஆம் வகுப்பு மாணவி பூமிகா 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி 2 தங்க பதக்கம் மற்றும்  ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து சாதனை படைத்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.