அமெரிக்கா, கடந்த 2022 ஆம் வருடத்தில் இந்தியாவை சேர்ந்த 1.25 லட்சம் மாணவர்களுக்கு விசா அளித்து சாதனை படைத்திருக்கிறது.

அமெரிக்க நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது, இந்திய நாட்டில் இருக்கும் எங்கள் தூதரகம் கடந்த வருடம் தற்போது வரை இல்லாத அளவிற்கு மாணவர்களுக்கு அதிக அளவில் விசா அளித்து சாதனை படைத்திருக்கிறது.

அந்த வகையில் இந்திய நாட்டைச் சேர்ந்த 1.25 மாணவர்களுக்கு விசா அனுமதி அளித்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் விண்ணப்பதாரர்கள் சிலரின் நீட்டிக்கப்பட்ட விசாக்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாவதை ஒத்துக் கொள்கிறோம். நேரத்தை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.