விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பழனி விருதாச்சலம் சப்- கலெக்டராக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கதாகவும். நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பழனி, நிருபர்களிடம் கூறியதாவது விழுப்புரம் மாவட்ட கலெக்டராக வேலை பார்க்க வாய்ப்பு வழங்கிய முதலமைச்சருக்கு மிக்க நன்றி. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள், சுகாதாரம், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 9444138000 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு என்னிடத்தில் குறைகள் புகார்களை தெரிவிக்கலாம். ஒருவேளை போனை எடுக்க முடியாத பட்சத்தில் பொதுமக்கள் வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் புகாரை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.