நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் பகல் நேரங்களிலும் உணவு மற்றும் தண்ணீரை தேடி விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று குன்னூர் உழவர் சந்தை அருகே இருக்கும் நூலக வளாகத்தில் காட்டெருமை சுற்றி திரிந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரம் அங்கேயே சுற்றிவிட்டு காட்டெருமை வனப்பகுதிக்கு சென்றது. எனவே காட்டெருமை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.