கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி கொத்தனூரில் பழனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நசம்மா(74) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் மூதாட்டியால் நடக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலையில் இருந்த நசம்மா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.