தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் லோயர்கேம்ப் என்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் மக்களுக்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் 12-வது வார்டு பொம்மஜ்ஜி அம்மன் கோவில் வடக்குதெரு, ஜக்கன நாயக்கர் தெரு, தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு, ஜோத்து கவுடர் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதால், அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி பொறியாளர் வரலட்சுமி, அலுவலர்களுடன் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின் அந்த பகுதியில் சாலைகளை தோண்டி  ஆய்வு செய்த பின்னர் பல நாட்களாகியும் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.