கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை என்ற இடத்தில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. இந்நிலையில் தோட்டங்களில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததால் யானைகள் வெளியே செல்ல முடியாமல் அங்கேயே நின்றன.

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மின் இணைப்பை துண்டித்து பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். எனவே யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.