லியோ படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக நடிகர் விஜய் மலேசியா செல்ல இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படத்திற்கான படபிடிப்பு வேலைகள் எவ்வளவு தீவிரமாக நடைபெற்றதோ, அதைவிட அதிதீவிரமாக படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே படம் குறித்து  அப்டேட் என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் ரசிகர்களிடையே ஆர்வமும், எதிர்பார்ப்பும் துளியளவும் குறைய விடாமல் படக்குழு அவ்வபோது சில தகவல்களை வெளியிட்டு வந்தது.

இனி  லியோவிற்கான பெரிய அப்டேட் என்றால், அது படத்திற்கான ஆடியோ லான்ச் தான். அதன்படி படத்தின் ஆடியோ லான்ச் கண்டிப்பாக மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைய இருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட குழுவானது ப்ரோமோஷனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக தளபதி விஜய் மற்றும் திரிஷா அவர்களை செப்டம்பர் மாதத்தில் மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. அதேபோல் துபாய்க்கும் புரமோஷன் பணிக்காக விஜய் செல்ல இருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.