கைதி பட பிரபலம் அர்ஜுன் தாஸ் LEO படம் குறித்து பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பென்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே பல அப்டேட்டுகள் வரிசையாக ரசிகர்களுக்கு கிடைத்த நிலையில்,

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு தற்போது வந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள அல்லது படம் குறித்து தகவலறிந்த பல நட்சத்திர பிரபலங்கள் லியோ படம் குறித்து தொடர்ந்து ஏதேனும் ஒரு தகவலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் , 

சமீபத்திய இன்டர்வியூவில் லியோ குறித்து பேசிய கைதி பட பிரபலம் அர்ஜுன் தாஸ், படத்திற்கான கதையை விவாதிக்கும் குழுவில் நான் இருந்தேன். யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம் அந்த பாத்திரத்திற்கான வேலை என்ன என அனைத்தும் எனக்கு தெரியும். லியோ படம் யாரும் எதிர்பார்க்காத விதமாக பெரிய அளவிலான இன்ப அதிர்ச்சியாக  இருக்கும்.

ரசிகர்கள் அனைவரும் படம் LCU வில்  இருக்கிறதா என ஆர்வமாக கேட்டு வருகின்றனர். அவர்களுடைய ஆர்வத்திற்கு விருந்தாக அக்டோபர் 19 தியேட்டர் வெடிக்கும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து லியோ படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, இதற்கான பதில் அக்டோபர் 19 தியேட்டரில் தெரிந்து கொள்வீர்கள் என தெரிவித்துள்ளார்.