அடுத்த மூன்று மாதத்தில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் மீம்ஸ்களாக இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

2023 ஆம் ஆண்டின் முதல் பாகமான ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலகட்டத்தை கடந்து விட்டோம். இனி வரக்கூடிய ஆறு மாத காலகட்டம் மற்றவர்களுக்கு எப்படியோ சினிமா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். ஜூலை மாதத்தில் மாவீரன் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஓபன் ஹெய்மர்  உள்ளிட்ட திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து  ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம், செப்டம்பர் மாதத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில்  ஷாருக்கான் (கிங் கான் ) நடிக்கும் ஜவான் திரைப்படம், அக்டோபர் மாதத்தில் அனைவரும் அதிக அளவு எதிர்பார்த்த தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள லியோ திரைப்படம் என லிஸ்ட் பெரிதாகி கொண்டே போகிறது.

மேற்கண்ட 3 படங்களும் 3 முக்கிய இயக்குனர் மற்றும் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படம் என்பதால் பெரும் கொண்டாட்டம் தான். மேலும் இந்த மூன்று படங்களிலும் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.