தமிழக அரசியல் களத்தில் விஜய் அவர்களின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார்.

தவெக-வை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், இளைஞர்கள் மத்தியில் அந்த கட்சிக்கு நல்ல வரவேற்பு மற்றும் ஈர்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியின் பலத்தையும் ராகுல் காந்தியையும் அங்கீகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழலில், திமுகவுடன் தங்களது கட்சியின் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த தேர்தலில் தாங்கள் விரும்பும் இடங்களை அவர்களிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.