தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமாக வலம் வருபவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்கிய நாள் கடவுள் இல்லை படம் அண்மையில் வெளியானது. இயக்குனராக மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் அவர் நடித்து உள்ளார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் புதியதாக வர இருக்கும் தொடரில் சந்திரசேகர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை ராதிகாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்குரிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் நடிகை ராதிகாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த கூட்டணியானது கண்டிபாக வெற்றியடையும் என்று கூறுகின்றனர்.