பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவர் 3-வது முறையாக கிராமி இசை விருதை பெற்றுள்ளார். இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வருடம் தோறும் கிராமி இசை விருது வழங்கப்படும். அந்த வகையில் 65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது Divine Tides என்று ஆல்பத்துக்காக ரிக்கி தேஜுக்கு 3-வது முறையாக கிராமி விருது கிடைத்துள்ளது. மேலும் கிராமி விருதை பெற்ற ரிக்கி தேஜ் இந்திய இசையை அங்கீகரித்து இந்த உயரிய விருதுக்கு பரிந்துரை செய்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த விருது என்னை மேலும் ஊக்கப்படுத்தும் என்று கூறினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகியான பியான்ஸே நோலஸ் 32-வது முறையாக கிராமி விருதை பெற்று அதிக கிராமி விருதுகளை பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பாக ஜார்ஜ் சோல்டி அதிகபட்சமாக 31 கிராமி விருதுகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.