மாசி மாத பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் கூடி வரும்  நாளே மாசிமகம் ஆகும். அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி உடன் கூடிய மக நட்சத்திர நாளில் விரதம் இருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 7 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மேல்நிலை பள்ளிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.