இந்திய சினிமாவில் முக்கியமான பெண் இயக்குனர்களில் ஒருவராக திகழ் பவர் சுதா கொங்காரா. இவர் தெலுங்கு சினிமாவில் ஆந்திரா அண்டகாடு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் துரோகி, இறுதிச்சுற்று மற்றும் சூரரை போற்று போன்ற படங்களை இயக்கினார். இதில் சூரரைப் போற்று திரைப்படம் பல தேசிய விருதுகளை குவித்தது. இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்காரா நடிகர் மாதவனை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து அசத்தியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை சுதா கொங்காரா தன் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விருந்தில் ரத்னகிரி அல்போன்சா மாம்பழம், பெண்டலம் பச்சடி, தயிர் சாதம், வத்த குழம்பு, சாம்பார், வங்கை அன்னம் மற்றும் வடியலு போன்ற பல வகையான உணவுகள் இடம் பெற்றுள்ளது. இந்த உணவுகளை நடிகர் மாதவன் ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நடிகர் மாதவன் மீண்டும் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.