தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெறுகிறது. நடிகர் சிம்பு வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் 3 படங்களில் நடிப்பதற்கு கமிட்டானார்.

ஆனால் சம்பளப் பிரச்சினை காரணமாக கொரோனா குமார் படத்திலிருந்து சிம்பு விலகிய நிலையில் வெந்து தணிந்தது காடு 2 படத்தில் நடிப்பதற்கான கால்ஷீட்டையும் கமலுக்கு கொடுத்துள்ளார். இதனால் ஐசரி கணேஷ் மற்றும் சிம்பு ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட இது குறித்து சிம்பு கமலிடம் தெரிவித்துள்ளார். உடனே கமல் நடிகர் சிம்புவுக்காக நேரடியாக களத்தில் இறங்கி ஐசரி கணேஷிடம் பேசி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனையை சுமூகமான முறையில் தீர்த்து வைத்துள்ளார்.