சூன் 18  கிரிகோரியன் ஆண்டின் 169 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 170 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

618 – லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.

656 – அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார்.

1429 – பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.

1633 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார்.

1767 – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவைக் கைவிட்டு வெளியேறினர்.

1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் காங்கிரசு பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது.

1815 – நெப்போலியப் போர்கள்: வாட்டர்லூ சமரில் நெப்போலியன் பொனபார்ட் வெல்லிங்டன் பிரபுவினால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் பிரான்சின் அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.

1830 – பிரான்சு அல்சீரியாவை ஊடுருவியது.

1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை ஆல்ஃவிரடு அரசல் வாலேசுவிடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.

1869 – இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.

1887 – வேற்று நாடு ஒன்று தமது நாடுகளுடன் போரில் ஈடுபட்டால் இரு நாடுகளும் நடுநிலை வகிப்பதென்ற ஒப்பந்தத்தில் செருமனியும், உருசியாவும் கையெழுத்திட்டன.

1900 – வெளிநாட்டுத் தூதுவர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என சீனாவின் பேரரசி டோவாகர் சிக்சி ஆணை பிறப்பித்தார்.

1908 – சப்பானியர்கள் 781 பேர் பிரேசிலின் சான்டோசு கரையை அடைந்ததுடன் சப்பானியக் குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.

1908 – பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1928 – வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1946 – சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

1948 – கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை நியூயார்க்கில் வெளியிட்டது.

1953 – 1952 எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1953 – ஐக்கிய அமெரிக்க வான்படையைச் சேர்ந்த சி-24 விமானம் சப்பான், தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.

1954 – அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.

1965 – வியட்நாம் போர்: அமெரிக்கா பி-52 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணி கரந்தடி வீரகளைத் தாக்கியது.

1972 – பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று இலண்டன் ஈத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.

1979 – போர்த்தந்திர படைக்கலக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.

1981 – அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1981 – கரவுத் தொழினுட்பத்தைக் கொண்டு தயாரான வானூர்தி லொக்கீட் எப்-117 நைட்கோக் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.

1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சாலி றைட் விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1983 – பகாய் சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் ஈரான் சீராசு நகரில் தூக்கிலிடப்பட்டனர்.

1985 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

1994 – வட அயர்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.

2006 – கசக்ஸ்தானின் முதலாவது செயற்கைக்கோள், காஸ்சாட் ஏவப்பட்டது.

2018 – சப்பான், வடக்கு ஒசாக்காவில் 5.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1799 – வில்லியம் இலாசல், ஆங்கிலேய வானியலாளர், வணிகர் (இ. 1880)

1816 – ஜங் பகதூர் ராணா, நேப்பாள மன்னர் (இ. 1877)

1882 – கியார்கி திமித்ரோவ், பல்கேரியாவின் 32வது பிரதமர் (இ. 1949)

1908 – கக்கன், தமிழக அரசியல்வாதி (இ. 1981)

1918 – உபைதுல்லா, மலேசியத் தமிழ் அரசியல்வாதி (இ. 2009)

1920 – சின்ன அண்ணாமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1980)

1924 – கோபுலு, தமிழக ஓவியர் (இ. 2015)

1926 – ஆலன் சாந்தேகு, அமெரிக்க வானியலாளர், அண்டவியலாளர் (இ. 2010)

1941 – பஞ்சு அருணாசலம், தமிழகத் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர் (இ. 2016)

1942 – தாபோ உம்பெக்கி, தென்னாப்பிரிக்காவின் 23வது அரசுத்தலைவர்

1948 – ஹரிலால் காந்தி, இந்திய அரசியல்வாதி, மகாத்மா காந்தியின் மூத்த மகன் (பி. 1888)

1949 – லேக் காச்சின்ஸ்கி, போலந்தின் 4வது அரசுத்தலைவர் (இ. 2010)

1959 – கெயில் வாசு ஒக்சலேட், கனடிய நிதி எழுத்தாளர், ஊடகவியலாளர்

1960 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2008)

1962 – இலிசா ராண்டால், அமெரிக்க இயற்பியலாளர்

1965 – த. சதீஷ்குமார், தமிழக எழுத்தாளர்.

1986 – ரிச்சர்ட் மேடன், இசுக்கொட்டிய நடிகர்

இன்றைய தின இறப்புகள்

1753 – கிளாடு பிரான்சுவா ஜெப்ராய், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1729)

1858 – ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)

1922 – யாகோபசு காப்தேயன், டச்சு வானியலாளர் (பி. 1851)

1928 – ருவால் அமுன்சென், நோர்வே விமான ஓட்டி, நாடுகாண் பயணி (பி. 1872)

1936 – மாக்சிம் கார்க்கி, உருசிய புதின எழுத்தாளர் (பி. 1868)

1972 – மில்டன் இலாசெல் குமாசன், அமெரிக்க வானியலாளர் (பி. 1891)

1977 – பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர், தமிழகப் புலவர் (பி. 1898)

1980 – சின்ன அண்ணாமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1920)

2009 – அலி அக்பர் கான், இந்துத்தானி இசைக் கலைஞர் (பி. 1922)

2010 – ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீச புதின எழுத்தாளர் (பி. 1922)

2011 – பிரெடிரிக் சிலுபா, சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1943)

2014 – இஸ்டெபனி குவோலக், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1923)

2021 – மில்கா சிங், இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. 1929)

இன்றைய தின சிறப்பு நாள்

மனித உரிமைகள் நாள் (அசர்பைஜான்)