கொரோனாவிற்கு பிறகு மக்கள் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் மக்களை கவரும் விதமாக பெரிய வங்கிகளின் முதல் சிறிய வங்கிகள் வரை டெபாசிட் தொகைகளுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி என்னென்ன வங்கிகளில் அதிக வட்டி கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் பேமென்ட் வங்கி 1 முதல் 2 லட்சம் வரை சேமிப்பு கணக்கிற்கு 7 சதவீதம் வட்டி. ESAF சிறு நிதி வங்கி ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 15 லட்சத்திற்கு அதிகமான இருப்புத் தொகைக்கு 6.5% வட்டி, equitas ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 1 லட்சம் வரையிலான இருப்பு தொகைக்கு 3.5 சதவீதமும், 5 லட்சம் வரையிலான இருப்பு தொகைக்கு 7 சதவீதமும் வட்டி கொடுக்கிறது. பின்கார் ஸ்மார்ட் பைனான்ஸ் பேங்க் அஞ்சு லட்சத்திற்கும் மேலான இருப்பு தொகைக்கு 7.11 சதவீதம் வட்டி வழங்குகிறது. சூர்யாதோய் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 1 லட்சத்திற்கு மேல் உள்ள இருப்பு தொகைக்கு 6.7% வட்டி கிடைக்கிறது.