நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கோடை விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிள் உத்தர பிரதேச மாநிலத்தில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒன்பதாவது சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்கும் வகையில் கோடை விடுமுறையில் ஜூன் 21ஆம் தேதி மட்டும் அனைத்து தொடக்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை திறக்க முதல்வர் யோகி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் அந்த நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு யோகாவின் நன்மைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. யோகா பயிற்சி தவற இந்த நாளில் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.