வரும் ஜூன் 30, 2023-க்குள், அனைத்து வங்கிகளுக்கும் லாக்கர் வைத்திருப்பவர்களில் குறைந்தது 50% பேர் புது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதை உறுதிசெய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே லாக்கர் தொடர்பாக SBI, தன் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது “திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயவு செய்து உங்களது வங்கி கிளையை அணுகவும். SBI நீங்கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தால், மற்றுமொரு துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

SBI-ன் சிறிய லாக்கர் வாடகை கட்டணம் வங்கி நகர்ப்புற மற்றும் மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 மற்றும் GST-ஐ கட்டணமாக எஸ்பிஐ வசூலிக்கிறது. அதே சமயத்தில் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குரிய கட்டணம் ரூ.1500 மற்றும் ஜிஎஸ்டி ஆகும். SBIன் நடுத்தர அளவுடைய லாக்கர் வாடகை கட்டணமானது வங்கி மெட்ரோ மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.4000,GST, கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 ஆகும்.

மேலும் SBIன் பெரிய லாக்கர் வாடகை கட்டணம் நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.8000+GST-ஐ செலுத்துகின்றனர். அதே சமயத்தில் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.6000+GST செலுத்துகின்றனர். SBI மிகப்பெரிய லாக்கரின் வாடகை மெட்ரோ, நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,000 மற்றும் GST எனும் கட்டணத்தை எஸ்பிஐ வசூலிக்கிறது. அதோடு கிராமப்புற, நகர்ப்புற வாடிக்கையாளர்கள் ரூ.9000 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SBI லாக்கர் கையாள்வதற்குரிய கட்டணங்கள் எஸ்பிஐ லாக்கரை வருடத்திற்கு 12 முறை கட்டணம் இன்றியும், பின் ஒவ்வொரு முறை வரும்போதும் ரூ.100 + GST கட்டணம் செலுத்தவும். செயல்படாத லாக்கர் உரிய நேரத்தில் வாடகை செலுத்தப்பட்டாலும், லாக்கர் 7 வருடங்கள் இயக்கப்படாவிட்டால், லாக்கரில் உள்ள பொருட்களை லாக்கர் வாடகைதாரரின் நியமனதாரர்கள் (அ) சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மாற்றலாம் (அ) வெளிப்படையான முறையில் பொருட்களை அப்புறப்படுத்தலாம்.