ஒருசில சந்தர்ப்பங்களில் தனி நபர்கள் தங்களது வீட்டு முகவரியை பான்கார்டில் மாற்ற வேண்டிய சூழல் வரும். ஆதார் அட்டைகள் மற்றும் டிஜிட்டல் பிளாட் பார்ம்களின்  ஒருங்கிணைப்புடன் தனி நபர்கள் தற்போது தங்களது வீட்டில் இருந்தபடியே அத்தகைய முகவரி புதுப்பிப்புகளை வசதியாக செய்யலாம். முகவரி புதுப்பிப்பு செயல்முறையை துவங்க தனி நபர்கள் UTI உள்கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் சேவை லிமிடெட் (UTIITSL) போர்ட்டலை பார்வையிடுவதன் வாயிலாக தொடங்கலாம். மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் உள்பட பல பான்கார்டு குறித்த சேவைகளுக்குரிய பிரத்யேக தளமாக இந்த போர்டலானது செயல்படுகிறது.

இந்த போர்ட்டலில் தனி நபர்கள் “பான் கார்டில் மாற்றம்/திருத்தம்” விருப்பத்தை கிளிக் செய்து பின், பான் கார்டு விவரங்களில் மாற்றம்/திருத்தம் செய்ய விண்ணப்பிக்கவும் என்பதை தேர்ந்தெடுத்து “அடுத்து” என்பதைக் கிளிக் செய்யவும். தொடர்ந்து அடுத்த பக்கத்தில் தனி நபர்கள் தங்களது பான் எண்ணை உள்ளிட்டு “ஆதார் அடிப்படை e-kyc முகவரி புதுப்பிப்பு” விருப்பத்தை சரிபார்க்கவும்.

இத்தேர்வு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தரவுத்தளத்தில் இருந்து பெறப்பட்ட விவரங்களை புதுப்பிப்பதற்கு உதவுகிறது. அதன்பின் “சமர்ப்பி” பொத்தானை அழுத்துவதற்கு முன் தனி நபர்கள் தங்களது ஆதார் எண், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தேவையான அனைத்து விபரங்களையும் வழங்கவேண்டும்.

சமர்ப்பிப்பு முடிந்தவுடன் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒருமுறை கடவுச்சொல் (OTP)அனுப்பப்படும். தனிநபர்கள் பெற்ற OTP-ஐ உள்ளிட்டு “சமர்ப்பி” என்பதை கிளிக் செய்யவும். இந்த நேரடியான வழிமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாக உங்களது ஆதார் கார்டில் சேமிக்கப்பட்டுள்ள தகவலை பயன்படுத்தி வீட்டு முகவரியை வெற்றிகரமாக மாற்றியுள்ளீர்கள். முகவரி புதுப்பிப்பு வெற்றிகரமாக இருந்தால் தனி நபர்கள் தங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்ணில் மின்னஞ்சல் மற்றும் SMS அறிவிப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.