விசிக தலைவர் திருமாவளவன் டுவிட் போட்டு பிக்பாஸ் விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார். விசிக தலைவர் திருமாவளவன் பிக்பாஸில் விக்ரமனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டது குறித்து நடிகை வனிதா கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலர் youtube சேனல்களை தொடர்பு கொண்டு தனக்கு மிரட்டும் வகையில் எச்சரிக்க முயல்வதாக வனிதா தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிக்பாஸில் வெற்றி பெறுவதற்கே இவ்வளவு அராஜகம் என்றால், தேர்தல் வரும் போது என்ன நடக்கும் என வனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.