தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்த விஜயகுமாரின் மகள் வனிதா. தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாக அறிமுகமாகி பின் துணை நடிகையாக நடித்து வந்த அவர் திருமணம் நடந்த நிலையில் படத்தில் நடிக்காமல் இருந்தார். பிறகு மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என பிஸியாக இருக்கின்றார். மேலும் தொழில்களும் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் அவர் காமெடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசனின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதற்கு நெட்டிசன்கள் பலவகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.