மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் அரியவன். இந்த திரைப்படம் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் இஷான் அறிமுகமாகியுள்ளார். ஹீரோயினாக ப்ரணாலி நடித்திருக்கின்றார். ஆதரவற்ற ஹீரோயினை ஹீரோ ஒரு பக்கம் காதலிக்க மற்றொரு பக்கம் வில்லன் சில இளைஞர்களை வைத்துக்கொண்டு பெண்களை காதல் வலையில் வீசி ஆபாசமாக வீடியோ எடுகின்றார்.

அதை காட்டி மிரட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றார். இதில் ஹீரோயின் தோழி ஒருவர் சிக்கிக் கொள்கின்றார். அப்போது ஹீரோவின் உதவியை நாடுகின்றார்கள். இதன்பின் ஹீரோ வில்லனிடம் இருந்து பெண்களை எப்படி காப்பாற்றுகின்றார் என்பது மீதி கதை. படத்தின் நீளம் குறைவாக இருப்பதும் பரபரப்பு கொஞ்சம் குறைவாக இருப்பது படத்தின் மைனஸ் ஆக இருந்தாலும் பெண்களுக்கான ஒரு கருத்தினை பதிவு செய்திருக்கின்றார்கள்.