சுகுமார் டைரக்டு செய்த புஷ்பா திரைப்படத்தின் வாயிலாக அல்லு அர்ஜுன் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்தார். இப்படத்தின் வெற்றியை அடுத்து, அதன் 2வது பாகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் அர்ஜுனின் 23வது திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் புது படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
“ராதே ஷ்யாம்” உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பூஷன் குமார் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து படத்தின் பெயர், நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Fully Energised & Determined 🤝@alluarjun @imvangasandeep #BhushanKumar #KrishanKumar @vangapranay @TSeries @vangapictures #ShivChanana @neerajkalyan_24 pic.twitter.com/jb2KeLZ9ue
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) March 3, 2023