சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 170-வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்கிறார். விரைவில் சூட்டிங் தொடங்க இருக்கிறது. 170-வது திரைப்படத்தின் கதை, கதாநாயகி, படத்தில் இடம்பெறும் இதர நடிகர், நடிகைகள் விவரங்கள் உள்ளிட்ட எதுவும் வெளியாகவில்லை. எனினும் படம் பற்றி யூகமான பல தகவல்கள் கசிந்து வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற பரபரப்பான ஒரு உண்மை சம்பவம் குறித்த கதையை மையமாக கொண்டு இப்படம் தயாராவதாகவும், இதில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் சோஷியல் மீடியாவில் தகவல் பரவியுள்ளது. இதற்கிடையில் தூக்கு தண்டனை கூடாது என்பது ஒரு சாரார் கருத்தாக இருக்கிறது. அக்ருத்து ரஜினி படத்தின் பிராதானமான மையக் கருவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் மற்றும் தோற்றத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.