நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதாவது, இந்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன் சேர்த்து 12 தினங்கள் விடுமுறை விடப்படவுள்ளது. தற்போது மார்ச் மாத வங்கி விடுமுறை பட்டியல் குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.
# மார்ச்-3 சாப்சார் குட்
# மார்ச்-5 ஞாயிற்றுக்கிழமை
# மார்ச்-7 ஹோலிகா தஹன்
# மார்ச்-8 துலேதி / டோல்ஜாத்ரா / ஹோலி
# மார்ச்-9 ஹோலி பண்டிகை
# மார்ச்-11 மாதத்தின் 2-வது சனிக்கிழமை
# மார்ச்-12 ஞாயிற்றுக்கிழமை
# மார்ச்-19 ஞாயிற்றுக்கிழமை
# மார்ச்-22 குடிபத்வா/உகாதி/பீகார் நாள்/சஜிபு நோங்மபான்பா (சீரௌபா)/தெலுங்கு புத்தாண்டு
# மார்ச்-25 4-வது சனிக்கிழமை
# மார்ச்-26 ஞாயிற்றுக்கிழமை
# மார்ச்-30 ஸ்ரீ ராம நவமி