மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள யாவத்மல் விதர்பா எனும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் சாலையின் கீழ் பதிக்கப்பட்டு இருந்த ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பெரிய குழி ஏற்பட்டது. அதோடு ராட்சத குழாய் வெடிப்பால் தண்ணீர் வேகமாக பொங்கி வந்தது.

இந்த நிலையில் அதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து அப்பகுதியினர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். இந்த குழாய் வெடிப்பு குறித்து வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.