நாங்குநேரி பிரச்சனைக்கு ”மாமன்னன்” படம் தான் காரணம் என்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றசாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. கலை அல்லது இயலக்கியமாக,  சினிமாவாக ஒவ்வொரு வடிவத்திலும் வருகின்ற போது ஒவ்வொரு செய்தியை அவர்கள் செல்கிறார்கள்.

அது குறிப்பிட்ட ஒரு படமா ? அல்லது தொடர்ச்சியாக இருக்கின்ற படமா ? அல்லது வேறு விதமா என்று குற்றம் செய்த குழந்தைகள் கிட்ட எந்த தாக்கத்தை கொடுத்திருக்கின்றது என்பதை தான் தெரிந்து சொல்ல முடியும். பொத்தாம்பொதுவாக அப்படி இல்லை. ஆனால் இன்றைக்கு பிரிவினையை வைத்து,  வெறுப்பினை விதைக்கின்ற பல்வேறு விதமான விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதை அத்தனை பேரும் கவனத்தோடு அணுக வேண்டும்.

சில நேரங்களில் சமுதாயத்தில் நடக்கிறதை சினிமாவில் சொல்லுவாங்க. சினிமாவில் நடப்பதை பார்த்து சமுதாயத்தில் அந்த கருத்தை எடுத்துக்கொள்வார்கள். அதனால ”மாமன்னன்” படத்தை நான் நான்கு நாளைக்கு முன்னால தான் பார்த்தேன். அந்த படத்தின் கருத்து ரொம்ப அற்புதமான கருத்து. அதாவது இந்த விஷயம் சமுதாயத்தில் இருக்குது அப்படிங்கிறதை….அவுங்க  சொன்ன விதம் கரெக்ட் தான். ஆனால் தமிழ்நாட்டில இன்னமும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது அப்படிங்கறது தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவமானமான விஷயமாக பார்க்கணும் என தெரிவித்தார்.