ஆளுநர் கையெழுத்து போட்டு இருந்தால் நீட் மரணம்  நடந்திருக்காது என்றும்,  ஆளுநர் கையெழுத்து போடாததால் தான் இந்த நிகழ்வு நடந்தது என்றும் செய்தியாளர் கேட்டதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன்,

இன்றைக்கு ஆளுநரின் கையில் எதுவும் இல்லை என்று மாநிலத்தின் அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறாரே… ஒருபுறம் இந்த அமைச்சர் என்ன சொல்லுகிறார் ? உங்கள் அரசாங்கத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்….  கவர்னர் கையெழுத்து போட்டாலும் போடவில்லை என்றாலும்,  இப்போது பிரச்சனை இல்லை. இப்போது கவர்னருக்கும் – நீட்டுக்கும் தொடர்பு இல்லை.

குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு போயிடுச்சி என்று உங்க சுகாதாரத்துறை அமைச்சர் தான் சொன்னாரு. எப்போ நேத்து,  இன்னைக்கு நீங்க என்ன சொல்றீங்க? அவர் கையெழுத்திட்டு இருந்தால் அப்படின்னு சொல்றீங்க….   என்ன நடைமுறையில் இருக்கிறதோ, அதை கவர்னர் நிறைவேத்திட்டு இருக்கார். இரண்டாவது முறை அனுப்புனீங்க, அவர் கையெழுத்து போட்டு அனுப்பிட்டார். அதனால கவர்னர் மேல் பாய்வதை விட்டுட்டு,  தமிழ்நாட்டில் இன்னும் இது போல எத்தனையோ தற்கொலைகள் நடந்திட்டு இருக்கு.

தமிழ்நாட்டில் இம்மாதிரி எத்தனையோ தற்கொலைகள், நீங்கள் ஒவ்வொரு சம்பவத்தையும் எடுத்து பாத்துட்டீங்கன்னு சொன்னா….  உங்களுடைய சட்ட ஒழுங்கு காரணமா இருக்கு. ஒரு மாணவி அவளுடைய பாதுகாப்பு சரி இல்லாமல்,  அவளை துன்புறுத்தி ரயில்வே ஸ்டேஷன்ல ரயில் முன்னாடி ஒரு இளம் பெண் மரணம் அடைந்து இருக்கிறார். அப்போ இந்த நாட்டில் நடக்கிற எல்லா மனித உயிர்களையும் ஒரே மாதிரி தானே பார்க்க வேண்டும். மாநிலத்தின் முதல்வர் எல்லோருக்கும் பொதுவான முதல்வர் ஆச்சே என தெரிவித்தார்.