டாஸ்மாக் கடைகளின் வாடகை, மின் கட்டணம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் ஊழியர்கள் உடையும் பாட்டில்களுக்கு நஷ்ட ஈடு கேட்டனர். அதையும் பரிசீலிப்பதாக தெரிவித்தார். பின்னர் 500 கடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒரு ரூபாய் கூட கூடுதலாக பெறக் கூடாது என்று வலியுறுத்தினார். மேலும் டெட்ரா பேக்கில் மதுபானம் விநியோகிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.