சென்னை தலைமை செயலகத்தில் ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் ஊழியர்கள் உடையும் பாட்டில்களுக்கு நஷ்ட ஈடு கேட்டனர். அதையும் பரிசீலிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் நாட்டில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் விதமாக டிஜிட்டல் போர்டுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 5 கடைகள் வீதம் 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளன.

இதன்மூலம் மதுபான கடைகளில் கூடுதல் பணம் வாங்கும் நடைமுறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் மூலம் மதுபானங்கள் விலையில் மோசடி செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த திட்டம் அறிந்த மதுபிரியர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.