மக்களவையில் ஜெயலலிதா அவர்களுக்கு நடந்த அவதூறு  அவராகவே நடத்திக் கொண்ட நாடகம் என்று ஸ்டாலின் சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ரொம்ப நாளாக சிந்தித்து சிந்தித்து இப்போதுதான் சொல்லி இருக்கிறார். இது நடந்து கிட்டத்தட்ட பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம். இப்போதுதான் நம்முடைய முதலமைச்சர் ஒரு பொம்மை முதலமைச்சர்க்கு ஞாபகம் வந்து வெளிப்படுத்தியுள்ளதாக மக்கள் பார்க்கிறார்கள்.

பத்திரிக்கை செய்தி, ஊடக செய்தியை பார்த்தாவது இந்த முதலமைச்சர் தெரிந்து கொண்டு பேசி இருந்தால் நாட்டு மக்கள் ஒரு நல்ல முதலமைச்சர் என்று சொல்லி இருப்பார்கள். இப்போ பொம்மை முதலமைச்சர் என்று அவரே நிரூபித்து காட்டி விட்டார்.

இன்றைக்கு அவையிலே மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திலே நம்பிக்கை இல்லா கொண்டு வந்தார்கள். அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலே திருமதி கனிமொழி எம்பி அவர்கள் சில கருத்துக்களை சொன்னார். துரியோதனன் சபையில திரௌபதியை துச்சாதனன் துயில் உரித்த சம்பவத்தை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்திலே கருத்துக்கள் தெரிவித்தார்.

அதற்கு மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள்…   1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார். அதிலே எங்களுடைய  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அன்றைய தினம் எதிர் கட்சி தலைவராக இருந்தார். அப்போது நானும் சட்டமன்ற உறுப்பினராக அவருடன் பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு எடப்பாடி சட்டமன்றத்தில் வெற்றி பெற்று,  நான் அவையிலே நான் அப்போது அங்கு இருந்தேன். அந்த சம்பவம் நடைபெற்ற போது நானும் அவையிலிருந்து பார்த்தேன் என்ற முறையிலே இதை நான் தெரிவிக்கிறேன். அந்த அவையிலே கொடூரமான முறையிலே…  ஒரு சட்டம் இயற்றும் மாமன்றத்திலே….  அன்றைய முதலமைச்சர் திரு கருணாநிதி அவர்கள்  முன்னிலையிலே பெண்ணென்றும் பாராமல்….  ஓர் எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல்…. அம்மா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது என தெரிவித்தார்.