அனைத்து சினிமாவிலும் 2 பெரிய நடிகர்களின் படங்களுக்கு எப்போதும் பாக்ஸ் ஆபிஸ் சண்டை இருக்கும். அதிலும் குறிப்புபாக அஜித்-விஜய் படங்களுக்கு அதிகம் இருக்கும். அதன்படி வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு தற்போது பாக்ஸ் ஆபிஸ் சண்டை நடைபெற்று வருகிறது. ஒவ்வொறு இடத்திலும் 2 திரைப்படங்களுக்கான பாக்ஸ் ஆபிஸ் விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது.

கடந்த ஜன,.11 ஆம் தேதி வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ரீலிஸ் ஆகியது. இதுவரையிலும் உலகம் முழுவதும் அஜித்தின் துணிவு ரூபாய்.250 கோடி மற்றும் விஜய்யின் வாரிசு ரூ.290 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த 2 படங்களின் USA(North America) வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி வாரிசு பிளாப் எனவும் துணிவு பிளாக்பஸ்டர் எனவும் தெரிவிக்கின்றனர்.