தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி (76). இவர் உடல்நல குறைவினால் திடீரென காலமானார். இவர் நடிகர் ரஜினியின் காளி மற்றும் கர்ஜனை போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவருடைய  மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் பாபுஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் வாணி ஜெயராம், இயக்குனர் டிபி கஜேந்திரன் ஆகியோர் அண்மையில்  இறந்த  நிலையில் தற்போது மீண்டும் ஒரு தயாரிப்பாளர் உயிரிழந்திருப்பது தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ‌.