தல அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன நிலையில், தற்போது வரை 250 கோடி ரூபாய்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் மோதிய நிலையிலும், அதனை பெரிய அளவில் புரோமோஷன் செய்யவில்லை தயாரிப்பாளர் போனிகபூர். காரணம் என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அளித்த போனிகபூர் “பட புரோமோஷனுக்கு எதிரானவன் இல்லை நான்.

புரோமோஷன் செய்தால் ஆடியன்ஸ் இடம் ரீச் கிடைக்கும். அதற்கு RRR மற்றும் டாப் கன் மேவரிக் ஆகிய படங்கள் தான் சாட்சி. எனினும் துணிவு திரைப்படம் பற்றி ரசிகர்கள் அப்டேட் கேட்டுக்கொண்டே தான் இருந்தார்கள். அஜித்தின் ஸ்டார் அந்தஸ்துதான் துணிவு திரைப்படத்துக்கு புரோமோஷன். நடிகர்கள் கொடுக்கும் சப்போர்ட்டை வைத்துதான் எப்படி ப்ரோமோஷன் செய்ய முடியும் என்பதை தயாரிப்பாளர் முடிவுசெய்ய முடிகிறது” என கூறி இருக்கிறார்.