தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டான ஹன்சிகா முன்னணி  நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொழிலதிபர் சோகேல் கத்துரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி ஹன்சிகாஸ் லவ் ஷாதி ட்ராமாஸ் என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது. இந்த திருமண டீசர் அண்மையில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த டிரைலர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.