இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வரும் நிலையில் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கு யுபிஐ பணப்பரிவினைக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி யுபிஐ மூலம் தனி ஒரு நபருக்கு முதல் முறை படம் அனுப்பும்போது அதிகபட்சம் 2000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் பணம் அனுப்ப வேண்டும் என்றால் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் கடைகளில் பொருட்களை வாங்கும் போது இந்த கட்டுப்பாடு கிடையாது எனவும் இது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.