தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினார்கள். அவர்களை மீட்கும் பணியானது 15 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணியின் பொழுது தோல்வி ஏற்பட்டு தொழிலாளர்கள்மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களை மீட்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று சுரங்கப்பாதை மீட்பு பணியை  அம்மாநில முதல்வர் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை  சந்தித்து பேசிய அவர், சுரங்க ஈடுபாடுகளின் பக்கவாட்டில் 52 மீட்டர் தோண்டப்பட்டு விட்டது. இன்னும் சில மீட்டர் மட்டுமே மீதி இருக்கிறது .அதன் பின்பு குழாய் இணைக்கப்பட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட உள்ளார்கள். இன்று மாலைக்கும் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்துள்ளார்.