ரேஷன் கடையின் மூலமாக மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி வருகிறார்கள்.  அரசு நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது . தற்போது ரேஷன் பொருட்களை பெறுவதற்கான வழிமுறை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கேஒய்சி விவரங்களில் சரியான தேதிக்குள் சரிபார்க்காவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் கார்டு பயன்படுத்தாமல் எந்த ஒரு ரேஷன் பொருளையும் வாங்க விட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . இமாச்சல பிரதேசத்தில் மட்டுமே இந்த புதிய விதிமுறை அமலாகி உள்ள நிலையில் கூடிய விரைவில் அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.