60 முதல் 80 வயது உடைய ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காமல் பென்சன் பணத்தை பெற முடியாது. ஆனால் இதில் உங்களுக்கு ஒரு விருப்பம் உள்ளது. அதாவது அடுத்த வருடம் அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தால் பென்ஷன் பணம் மீண்டும் வர தொடங்கும்.

அதனோடு மீதமுள்ள தொகையும் கிடைக்கும்.ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழ் போர்ட்டல், முக அங்கீகாரம்,  இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, நியமிக்கப்பட்ட அதிகாரியின் கையொப்பம் மற்றும் வீட்டு வாசல் வங்கி சேவை மூலமாக ஐந்து வழிகளில் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.