நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 5-வது பட்ஜெட். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால மத்திய அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் இதுதான். இதனால் பட்ஜெட் மீது சாமானிய மக்கள் முதல் தொழில் துறையினர் வரை பல்வேறு தரப்பினருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியானது. அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் எந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி,

1. சுகாதாரத்துறை ரூ. 89,155 கோடி

2. விமான போக்குவரத்து துறை ரூ. 3,113 கோடி

3. பாதுகாப்பு துறை ரூ. 5,93,537 கோடி

4. கல்வித்துறை ரூ. 1,12,899 கோடி

5. ஊரக வளர்ச்சித் துறை ரூ. 1,59,964 கோடி

6. உள்துறை ரூ. 1,96,034 கோடி

7. தகவல் தொழில்நுட்பத் துறை ரூ. 16,548 கோடி

8. ரயில்வே துறை ரூ. 2,41,267 கோடி

9. நீர்வளத்துறை ரூ. 97,277 கோடி

10. தொழிலாளர் நலன் துறை ரூ. 13, 221 கோடி

11. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை ரூ. 22,137 கோடி

12. எரிசக்தி துறை ரூ. 10,222 கோடி

13. குழந்தைகள் மற்றும் மகளிர் நலன் துறை ரூ. 25,448 கோடி

14. சாலை போக்குவரத்து துறை ரூ. 2,70,434 கோடி

15. உணவு மற்றும் பொது விநியோகத்துறை ரூ. 2,05,764 கோடி

16. தொலைத்தொடர்புத்துறை ரூ. 1,23, 383 கோடி

17. வேளாண்மை துறை ரூ. 1,25,035 கோடி

மேலும் மொத்தமாக பட்ஜெட்டில் அனைத்து துறைகளுக்கும் ரூ. 45,03,097 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.