நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அமுத பாரத திட்டத்தின் கீழ் 1,275 ரயில் நிலையங்கள் புதிதாக கட்டப்படும்.

அதன் பிறகு வந்தே பாரத் ரயில்கள் இனி சென்னையில் மட்டுமின்றி ஹரியானாவில் உள்ள சோனிபத் மற்றும் மராட்டியத்தில் உள்ள லத்தூர் ஆகிய பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்கள் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரயில் முதலில் கல்கா-ஷிம்லா போன்ற பகுதிகளில் இயக்கப்படும். மேலும் இதைத் தொடர்ந்து பிற இடங்களுக்கும் ஹைட்ரஜன் ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.