வங்கிகள் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிவர்த்தனையை வழங்கி வருகிறது.

அதனால் வாடிக்கையாளர்களும் வங்கிக்கு செல்வதை தவிர்த்து விட்டு வீட்டில் இருந்தபடியே வேலைகளை முடித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில முக்கிய பணிகளுக்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. எனவே வங்கி விடுமுறை நாட்களை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் வரவிருக்கும் பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

5.02.2023 – ஞாயிற்றுக்கிழமை ( அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை), 11.02.2023 – 2ம் சனிக்கிழமை விடுமுறை, 12.0.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 18.02.2023 – மகா சிவராத்திரி (சில மாநிலங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை), 19.02.2023 – ஞாயிறு விடுமுறை, 20.02.2023 – மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை), 21.02.2023 – லூசார் (சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை), 25.02.2023 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை, 26.01.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.