மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்குரா நகரில் ஸ்வேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியுள்ளது. 9 வருடங்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய சுவேதா தன்னுடைய குடும்பத்திடம் அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக கூறிவிட்டு தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஸ்வேதாவை அவருடைய குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் அவருடைய செல்போன்‌ நம்பரை வைத்து குடும்பத்தினர் தேடி உள்ளனர்.

அப்போது போபால் நகரில் ஸ்வேதா இருப்பது தெரிய வந்ததால் ஸ்வேதாவை காணவில்லை என கடந்த 2016-ம் ஆண்டு குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உதியன் தாஸ் ஸ்வேதாவை கொலை செய்து ஒரு பெட்டியில் உடலை போட்டு தன்னுடைய படுக்கை அறையில் புதைத்து மேலே சிமெண்ட் போட்டு பூசியது தெரிய வந்தது. இவரை கைது செய்த காவல்துறையினர் கடந்த 2017-ம் ஆண்டு உதயன் தாஸுக்கு எதிராக 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு உதயன் தாஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இருப்பினும் போலீசார் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் உதியன் தாசிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2010-ம் ஆண்டு உதியன் தாஸ் அவருடைய தாய் இந்திராணி மற்றும் அவருடைய தந்தை வி.கே.‌தாஸ் ஆகியோரை படுகொலை செய்து ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள அவருடைய வீட்டுத் தோட்டத்தில் புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். மேலும் உதியன் தாஸ் தன்னுடைய காதலி மற்றும் தாய், தந்தை ஆகியோரை எதற்காக கொலை செய்தார் என்ற காரணத்தை போலீசார் வெளியிடவில்லை.